மயூராபதி பத்ரகாளியம்மன் ஆலயத்தின் சிறப்பு நிகழ்வுகள்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 7, 2024, 1:44:41 PM
இலங்கை வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் மகோத்சவ உற்சவம் இன்று பால்குடபவனியுடன் ஆரம்பமானது.
பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பால்குடத்தை சுமந்தவாறு மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
ALSO READ | பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
அதனை அடுத்து அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
இதே வேளையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயற் தலைவர் எஸ். சசிகுமார், இங்கு வருகை தந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாதுகாப்புச் செயலாளர் ஜென்ரல் கமல் குணரத்ன, கடற்படை தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் கட்டளை அதிகாரி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளரும் வடமாகாண அமைப்பாளருமான உமா சந்திர பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை வரவேற்றதை காண முடிந்தது.
அதே வேளை இலங்கையின் பௌத்த மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் வி துர விக்ரமாநாயக்க அவர்களை சந்தித்து தற்பொழுது இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலும் கருத்துக்களை எஸ்.சசிகுமார் பரிமாறிக் கொண்டார்.