சந்தனக்கூடு விழா 13 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.
கார்மேகம்
UPDATED: Jun 9, 2024, 6:43:30 AM
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் தர்ஹா சந்தனக்கூடு விழா வருகிற 13- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பெரியபட்டினம் மகான் செய்யது அலி ஒளியுல்லா தர்ஹாவின் 123- ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா வரும் 23/24- ந் தேதிகளில் நடைபெறுகிறது இதனையொட்டி வரும் 13- ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
23- ந் தேதி சந்தனக்கூடு விழா தொடங்கி 24- ந் தேதி வரை நடைபெறுகிறது 24- ந் தேதி காலை 10 மணியளவில் மவுலிது ஓதி அனைவருக்கும் நெய் சோறு வழங்கப்பட உள்ளது
சந்தனக்கூடு விழாவின் நிறைவாக அடுத்த மாதம் ( ஜுலை 3- ந் தேதி கொடியிறக்கம் நடைபெறுகிறது
இந்த விழாவில் பெரியபட்டினம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 09.06.2024
விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் ஹாஜா நஜிபுதீன் துணைத் தலைவர்கள் சிராஜுதீன் சையது இப்ராம்சா சாகுல்ஹமீது முகமது களஞ்சியம் ஹிக்மத்து பயாஸ்கான் அயூப்கான் செயலாளர் முகமது அபிபுல்லா ஜாகிர் உசேன் முகமது உசேன் உள்பட விழா கமிட்டி தர்ஹா கமிட்டி அனைத்து சமுதாய பொதுமக்கள் செய்து வருகின்றனர்.