• முகப்பு
  • ஆன்மீகம்
  • தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் மாலை வேளையில், ஆஞ்சநேயரின் வீதி உலா.

தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் மாலை வேளையில், ஆஞ்சநேயரின் வீதி உலா.

லட்சுமி காந்த்

UPDATED: May 22, 2024, 7:37:57 PM

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினந்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் காட்சியளித்து வருகிறார்.

மூன்றாம் நாளான இன்று காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

அதனை தொடர்ந்து இன்று மாலை தங்க ஹனுமந்த வாகனத்தில் மஞ்சள் நிற பட்டு உடுத்திய ஆஞ்சநேய சுவாமியின் நீட்டிய உள்ளங்கையில் வரதராஜ பெருமாள் பட்டு வஸ்திரம் , திருவாபரங்கள் அணிந்து கோவில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

கோவிலில் இருந்து புறப்பட்ட வரதர் செட்டி தெரு, ரங்கசாமி குளம், , நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், போன்ற மாநகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேதகோஷ்டியினர் ஆழ்வார் பாசுரங்களை வழங்கினர்.

தேவராஜ பெருமாள் கோயில் கோபுரம், வண்ண வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்ததை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

 

VIDEOS

Recommended