• முகப்பு
  • ஆன்மீகம்
  • மடவலை பஸார், பிரதான சந்தியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கலீலுர் றஹ்மான் (சந்தித் தக்கியா) விஸ்தரிக்கப்பட உள்ளது

மடவலை பஸார், பிரதான சந்தியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கலீலுர் றஹ்மான் (சந்தித் தக்கியா) விஸ்தரிக்கப்பட உள்ளது

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jun 16, 2024, 4:15:28 AM

கண்டி, மடவலை பஸார், பிரதான சந்தியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கலீலுர் றஹ்மான் (சந்தித் தக்கியா) விஸ்தரிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

உத்திதேச கட்டடத்தையும் விஸ்தரிப்புப் பணிளை ஆரம்பித்து துவாப் பிராத்தனையில் ஈடுபடுவதையும் காணலாம். 

இங்கு உரையாற்றிய மடவலை ஜாமியுல் கைராத் பிரதான பள்ளி நிர்வாக சபைத் தலைவர் ஏ.டப்ளியூ. எம். நாஜிம் தெரித்ததாவது-

இப்பள்ளி பிரதான பாதை மற்றும் பிரதான சந்தியில் இருப்பதால் வௌியூர் மக்கள் அடிக்கடி அதிகம் வருகை தரும் இடமாக உள்ளது. எனவே மூன்று மாடிகளைக் கொண்டிருந்த போதும் அடிக்கடி இட நெருக்கடிகள் ஏற்படுகின்றன. 

 அந்த வகையில் இது ஆடம்பரத்தின் அடிப்படையில் விஸ்தரிக்க முயற்சிக்கப்பட வில்லை. தேவையின் நிமித்தம் விஸ்தரிக்க வேண்டியுள்ளது. உத்தேச கட்டிடத்திற்கு சுமார் 50 மில்லியன் செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 எனவே மடவளையைப் பிறபிடமாகக் கொண்ட அனைத்து சகோதரர்களும் இது விடயமாக உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended