• முகப்பு
  • ஆன்மீகம்
  • நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம்

நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம்

ரமேஷ்

UPDATED: May 22, 2024, 8:33:13 AM

கும்பகோணம் அருகே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும். இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த, புண்ணிய தலமும் ஆகும்.

இத்தலத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம் இங்கு மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெற்று வருகிறது.

இத்தகைய பெருமை பெற்ற வைணவ தலத்தில் இன்று சிறப்புமலர் அலங்காரத்திலும், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி கொடிமரம் எதிரே, எழுந்தருள, நாதஸ்வர மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் நட்சத்திர தீப ஆர்த்தி செய்யப்பட்டது, இன்று நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது, முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான, 25ம் தேதி சனிக்கிழமை இரவு, ஓலைச்சப்பரத்தில் கருட சேவையும்,7 ஆம் நாளான 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும் ஒன்பதாம் நாளான 30 ஆம் தேதி வியாழக்கிழமை கட்டு தேரோட்டம் நடைபெறுகிறது,10 ஆம் நாள் 31 ஆம் தேதி ஸர்வதர் திருமஞ்சனம் ஸப்தாவரணம், புஷ்ப யாகத்துடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 

VIDEOS

Recommended