குத்தாலம் மகாகாளியம்மன் 7ம் திருநாள் திருநடன நிகழ்ச்சி.
செந்தில் முருகன்
UPDATED: May 1, 2024, 8:54:46 AM
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் இருந்து கடந்த 24ஆம் தேதி காளியம்மன் திருநடன உற்சவமனது தொடங்கி பல்வேறு ஆலயங்களில் எழுந்தருளி காளியாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று ஏழாம் நாள் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மகா காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது. குழந்தையை கையில் ஏந்தியபடியும் நடனமாடிய காளி கும்மியாட்டம், உடுக்கை,பம்பை,மகுடி, ஆகிய பல்வேறு நாதஸ்வரக் கலைஞர்களின் ராகங்களுக்கு ஏற்றவாறு காளி திரு நடனம் ஆடியது.
இந்த திருநடன உற்சவத்தை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வமுடன் வந்து பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
திரு நடனம் புரிந்தவாறு வீடு வீடாக சென்று பக்தர்களுக்கு அருள் ஆசி தரும் காளியை அமர வைத்து பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு வழிபாடு நடத்தினர்.