• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஆனி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.

ஆனி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 6, 2024, 10:33:02 AM

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆனி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிவப்பு நிற பட்டு உடுத்தி, மல்லிகை பூ, மனோரஞ்சிதம் பூ,சம்பங்கி பூ,மலர் மாலைகள், ஆபரணங்கள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆன்மீகம் செய்திகள்

பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆனி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

 

VIDEOS

Recommended