காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலாவின் போது குடையை தவறிவிட்ட பட்டாட்சியர்களால் பக்தர்கள் அதிர்ச்சி.
லட்சுமி காந்த்
UPDATED: May 22, 2024, 11:36:34 AM
Kanchipuram Devaraja Perumal Temple
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூன்றாம் நாளான இன்று கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நடைபெற்று வரும் கருட சேவையில் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தின் மீது உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார்.
Vaikasi Brahmotsavam
தொடர்ந்து மேற்கு ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் தொட்டாச்சாரியாருக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது.
இதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் கோபுர தரிசனம் நடைபெற்ற பின்னர், விளக்கடி கோயில் தெருவில் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் சன்னதிக்கு சென்ற பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் அங்கேயே பட்டாசியர்கள் குடை சாய்ய விட்டார்கள்.
அதேபோல், பிள்ளையார் பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை அடையும் பெருமாளுக்கு குடை மரியாதை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று புதிய குடைகளுடன், கச்சபேஸ்வரர் ஆலயம் அருகே வரதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் போது சுவாமிகளை தூக்கி வந்தவர்கள் சுவாமிகளை குலுக்குவது வழக்கம்.
அப்படி பெருமாளை குளிக்கும் போது பட்டாட்சியர்கள் பிடித்திருந்த குடையை நழுவு விட்டனர். குடை நழுவி கீழே விழும் போது பக்தர்கள் பிடித்து விட்டதால் குடை தரையில் விழாமல், மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது.
பட்டாசியர்கள் சரியாக குடைய பிடிக்காததால் இது ஏதோ அபசகுனம் போல நடக்கின்றது என பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.