கோயிலில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு.

ராஜா

UPDATED: Apr 27, 2024, 11:24:52 AM

சின்னமனூர் ஏப்- 27 , தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்தி நாயக்கன்பட்டியில் நகரிகுல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் ஆலயம் உள்ளது.

இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 27, 28 , 29 தேதிகளில் காலை சுமார் 6.45 மணி முதல் 6.52 வரை சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவறையில் அமைந்துள்ள அம்மன் சிலை மீதுபடும் அபூர்வ நிகழ்வு நடந்து வருகிறது.

வழக்கமாக நடந்த அந்த அரியநிகழ்வில் இன்றும் அதே நேரப்படி நடந்த சூரிய பகவான் அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் பரவசத்தோடு பங்கேற்றனர்.  

அதன் முன்னதாக அம்மனுக்கு பால், விபூதி, இளநீர் ,தேன் , நெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. 

200 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டகத்தில் இருந்த பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

அம்மனை சூரிய பகவான் வழிபடும் நிகழ்வுக்குப் பின்பு, தரிசனம் செய்த பக்தர்களுக்கு எலுமிச்சங்கனி, பூ வழங்கப்பட்டது. 

அதன் பின் பொங்கல் ,சுண்டல் ,புளியோதரை, பானகரம் உள்ளிட்டவை கொண்ட பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பின்னர் பக்தர்கள் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல், கோரிக்கைகளுக்காக அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

அதிசய நிகழ்வு மூர்த்தி நாயக்கன்பட்டி சூடம்மாள் கோயில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.

 

VIDEOS

Recommended