தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியின் நிறைவாக ஆதீன மடாதிபதி ஞான கொலுக்காட்சி பாவனை அபிஷேகத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்:-
செந்தில் முருகன்
UPDATED: May 31, 2024, 4:49:14 AM
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டணப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை கோடி நாட்டாமைகள் நான்குபேர் தலைமையில் 72 பேர் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர்.
இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது. பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார்.
இறுதியாக விழாவில் பங்கேற்ற ஆதீனங்களுக்கு சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடியவிடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி மறியாதை செய்து அருளாசி பெற்றனர்.