• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே நாகமந்தல் கிராமத்தில் தானே தோன்றிய சிவன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே நாகமந்தல் கிராமத்தில் தானே தோன்றிய சிவன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சண்முகம்

UPDATED: May 13, 2024, 11:52:22 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாகமந்தல் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுக்கு முன்பு சோழன் நாட்டில் பல சிவ தலங்கள் எங்கும் தோன்றின அதே போன்று நாகமந்தல் கிராமத்தில் குளத்தங்கரையில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் தானே தோன்றியதாக கூறப்படுகிறது

இதில் வாரந்தோறும் ஸ்ரீ நாகேஸ்வரருக்கு பூஜை செய்து வந்த நிலையில் கடந்த 50 ஆண்டுக்கு மேல் பராமரிப்பு இன்றி கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது ஊர் பொதுமக்களால் கோவிலை புதுப்பித்த நிலையில் கடந்த பத்தாம் தேதி கணபதி ஹோமம் தனலட்சுமி ஓமம் நவகிரக ஓமம் பூர்ணாஹீதி தீபாராதனை தொடங்கியது

11 தேதிஅனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி மிருத்சங்கிர ஓமனம் அங்கிருக்க பணம் புற்று மண் எடுத்தல் கடைஸ்தாபன பூஜை நடைபெற்றது

இரண்டாம் கால பூஜை கணபதி பூஜை வேதிகா பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன 13 தேதி திங்கட்கிழமை கோபூஜை சூரிய பூஜை சோம கணபதி பூஜை மற்றும் யாக கால பூஜை பூர்ணாகதி நடைபெற்றது.

இந்நிலையில் காலை சுமார் பத்து மணி அளவில் மேளதாளம் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது இதில் இதில் கிராம முகேஷ் நாட்டாமைகள் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended