ஸ்ரீ நட்சத்திர சிவாலயம் அடிக்கல் நாட்டு விழா

Admin

UPDATED: Apr 24, 2024, 10:45:25 AM

புதுச்சேரியில் இருந்து மயிலம் செல்லும் வழியில் சுத்து கேணி என்ற இடத்தில் ஸ்ரீ நட்சத்திர சிவாலயம் அமைய உள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஜப்பானிய தொழிலதிபர் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் அவர்களது தலைமையில் , ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர ஸ்வாமிகள் மற்றும் 

திருக்கயிலாய பரம்பரை வேலாங்குறிச்சி ஆதீனம் குரு மகா சன்னிதானம் மற்றும் திருக்கைலாயப் பரம்பரை செங்கோல் ஆதீனம் சன்னிதானம் மற்றும் 

ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகுமா குருமணி ஆகிய ஆதீனங்களின் திருக்கரங்களால் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

விழாக்கான ஏற்பாடுகளை ஜப்பானிய தொழிலதிபர் ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் அவர்களும் பழனி புலிப்பாணி ஆசிரமம் சண்முகானந்தம் என்ற ஜம்பு சாமிகளும் , ச.கௌதம் கார்த்திக், சிவசேனா மாநில செயல் தலைவர் க.சசிகுமார் அவர்களும் செய்திருந்தனர் .

 

  • 16

VIDEOS

Recommended