• முகப்பு
  • புதுச்சேரி
  • கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டால் ஊரை விட்டு தள்ளிவைப்பு.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டால் ஊரை விட்டு தள்ளிவைப்பு.

சக்திவேல்

UPDATED: Jul 11, 2024, 7:11:12 PM

Latest Puducherry News

புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 

போலீசாருக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

 

கஞ்சா

இருப்பினும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இரும்பு கரம் கொண்டு கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆப்ரேஷன் ஆம்லா, ஆபரேஷன் திரிசூல்

புதுச்சேரி போலீசார் ஆப்ரேஷன் ஆம்லா, ஆபரேஷன் திரிசூல், போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் கஞ்சா பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்து வழக்கில் கைது செய்யப்பட்டாலோ அவர்களை ஊரை விட்டு தள்ளி வைக்கப்படும் என்று தண்டோரா போட்டு ஊர் பஞ்சாயத்தார் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

Latest Puducherry News Headlines-

மேலும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளுக்கு கிராம பஞ்சாயத்து அவர்களுக்கு உதவுவார்கள் அதே சமயத்தில் 

போதைப்பொருள் உள்ளிட்ட கஞ்சா விற்பனைக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம் அப்படி கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்படுபவர்களுக்கு யாராவது துணை போனால் அவர்கள் மீதும் கிராம பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானத்தை ஊர் முழுக்க ஒலிபெருக்கி மூலம் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Latest Puducherry News in Tamil-

இதுகுறித்து ஊர் பஞ்சாயத்து கூறும்போது :

கஞ்சா லிட்டர் போதைப்பொரு நடமாட்டத்தை போலீசார் மற்றும் அரசாங்கம் மட்டுமே ஒழித்து விட முடியாது பொதுமக்களாகிய நாமும் அதற்கு துணை இருக்க வேண்டும் அதற்காகத்தான் வீராம்பட்டினம் கிராமத்தில் கஞ்சா பயன்படுத்தினால் ஊரை விட்டு ஒதுக்க வைப்போம் என்று முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். 

கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் நடமாட்டம் குறித்து தண்டோரா போட்டு ஊர் கட்டுப்பாடு எடுத்துள்ள வீராம்பட்டின கிராமத்தின் முடிவு அனைத்து கிராமங்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 

VIDEOS

Recommended