சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் களவாடிய கொள்ளையர்கள்.
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Mar 6, 2024, 8:29:23 PM
கடந்த 15.02.2024 – ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.V பாளையம் கிராமத்தில் தாமோதரன் மகன் அருள்ஜோதி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சுமார் 67 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23,50,000/- பணம் களவாடபட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Also Read : நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் கட்டாய கட்டண வசூலை தடுத்திட வேண்டும்.
இவ்வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்க திருக்கோவிலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் மேற்பார்வையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், திருமால், ராஜசேகர், தனசேகர் மற்றும் காவலர்கள் கூடிய 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.
நேற்று 05.03.2024-ந் தேதி காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை- சங்கராபுரம் சாலை கடுவனூர் கிராமம் பாக்கம் பிரிவு சாலை அருகில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு நபர்கள் காவலர்களை கண்டதும் தப்பியோட முயற்சித்த போது மடக்கி பிடித்து விசாரணை செய்த போது
1. மாரி (எ) மாரிமுத்து(30) த/பெ கோபால், மாரியம்மன் கோவில் தெரு, கூவாகம் கிராமம், உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 2. உதயா(24) த/பெ ரகு. நடுத்தெரு. சரவணம்பாக்கம் கிராமம், திருவெண்ணைநல்லூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது தெரிய வரவே இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2,19,000/- பணம் ஆகிய வழக்கு சொத்துக்களை கைப்பற்றி நீதிமன்ற அடைப்பு காவலுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் இரண்டு நபர்களை தனிப்படைகள் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்டுவந்த திருக்கோவிலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் தலைமையிலான தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,