• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு 10க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு 10க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

மாரியப்பன்

UPDATED: Mar 8, 2024, 7:37:09 PM

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

வி.களத்தூர் கிராமத்தில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் கல்லாற்றில் ஆறு இடங்களில் போர்வெல் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

Also Read : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சர்வாதிகாரியாக செயல்பட்டு இழிவாக நடத்துகிறார் என்று வழக்கறிஞர்கள் புகார்.

இந்நிலையில் வி. களத்தூர் கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ராயப்பா நகரில் வசித்து வரும் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் கல்லாற்றில் உள்ள போர்வெல் பகுதியில், வி.களத்தூர் கிராமத்தின் கழிவுநீர் நான்கு வழிகளில் வந்து சேர்ந்து தேங்கி நிற்பதால்,

குடிநீர் மாசுபாடு காரணமாக கிராமத்து சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் பத்துக்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read : கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு.

இதில் முத்துசாமி என்பவரது மகன் கார்த்திக்(34),மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை திருச்சி கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மேலும் அவரது மனைவி தேவி என்பவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும்

கல்லாற்றில் கழிவு நீர் கலப்பதாலேயே ஊருக்குள் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக ராயப்ப நகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Also Read  : நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு கல்லாற்றில் கழிவு நீர் கலப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதோடு காய்ச்சல் வருவதை தடுக்க சுகாதார குழுக்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Also Watch : Dr. Mrs. Chitra Shares Exclusive Summer Care Tips & Fertility Insights

இதனிடையே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் உத்தரவின் பேரில்,

சுகாதாரத் துறையினர் வி. களத்தூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended