- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு.
கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு.
அச்சுந்தன்
UPDATED: Mar 8, 2024, 6:46:52 AM
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இச்சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் இறந்த கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து இவ்வழக்கானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Also Watch : N.Sree Radha advocate- Empowering Advocate Voice for the Well-being of Children's and Women's
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23 ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது,அப்போது இதற்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் மூலம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன எனவும், இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மீண்டும் ஆய்வு மேற்க் கொள்ளவும் மனு அளிக்கப்பட்டது.
Also Read : கோயம்பேட்டில் டாஸ்மாக் ஊழியர் வெட்டபட்ட வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 3 ரவுடிகள் கைது.
இதன் அடிப்படையில் அரசு தரப்பு இது சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில், இவ்வழக்கின் கடந்த விசாரணையின் போது அரசு தரப்பு மூலம் அளிக்கப்பட்ட பதில் மனு ஏற்க்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read : நிலம் வீடு வாங்குவோருக்கு சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு.. உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.
இந்த இன்று சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான சிறப்பு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர்.
Also Read : போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.
இந்த ஆய்வில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சம்பவம் நடைபெற்ற போதும்,தற்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்ப்பட்டு உள்ளது என முழுமையாக ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் விசாரணையின் போது இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.