கோயம்பேட்டில் டாஸ்மாக் ஊழியர் வெட்டபட்ட வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 3 ரவுடிகள் கைது.
S.முருகன்
UPDATED: Mar 7, 2024, 7:09:36 PM
நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45), மாதவரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் சுரேசை வழிமறித்து சரமாரியாக வெட்டினார்கள்
Also Read : போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
கோயம்பேட்டை சேர்ந்த சாந்தகுமார்(22), சரவணன்(23), உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
இருவரும் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது பெட்ரோல் தீர்ந்து விட்டதாகவும் அதனை மற்றொரு வாகனத்தில் எடுத்து சென்றபோது சுரேஷ் எதிரே வந்து மோதியதாக கூறப்படுகிறது
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சுரேசை வெட்டிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது கைது செய்யப்பட்ட சாந்தகுமார் கல்லூரி மாணவர் என்பதும் மற்றவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.