• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சர்வாதிகாரியாக செயல்பட்டு இழிவாக நடத்துகிறார் என்று வழக்கறிஞர்கள் புகார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சர்வாதிகாரியாக செயல்பட்டு இழிவாக நடத்துகிறார் என்று வழக்கறிஞர்கள் புகார்.

ராஜ்குமார்

UPDATED: Mar 8, 2024, 11:37:59 AM

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205 நில ஆர்ஜிதம் செய்து கொண்டதற்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க கேட்டுக் கொண்ட விவசாயிகளுக்கு கடந்த நான்காம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நடுவருமான பிரபு சங்கர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது 

Also Read  : நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

கூட்டத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்ததால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளும் அவர்களின் சார்பில் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்

அதேபோல் ஏழை விவசாயிகளுக்காக மூத்த வழக்கறிஞரும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக போராடி வருபவருமான பி என் உதயகுமார் என்கிற வழக்கறிஞரும் கலந்து  கொண்டதாக கூறப்படுகிறது

Also Watch : Dr. Mrs. Chitra Shares Exclusive Summer Care Tips & Fertility Insights

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் முன் பேசிய வழக்கறிஞர் உதயகுமார் ஏற்கனவே இருந்த பழைய மாவட்ட ஆட்சியர்களால் இந்த வழக்கு குறித்து போடப்பட்ட உத்தரவுகளை குறித்து நினைவு படுத்தியதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இடைமறித்து ஒருமையில் நீ எனக்கு விதிமுறைகளைப் பற்றி உத்தரவிட வேண்டாம் என்று கூறி வெளியே போயா உட்காரதே இனிமே நான் இருக்கும் வரைக்கும் நீ ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடாது உன்னை பிளாக் லிஸ்டில் வைத்து விட்டேன் என் முன்பு ஆஜராக கூடாது நீ வெளியே போயா என்று தரைக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது

Also Watch : குழந்தையை தோளில் சுமந்தவாறு, கல்லூரிக்கு வருகை புரிந்து பட்ட படிப்பு பயிலும் நரிக்குறவர் பெண்மணி.

அதற்குப் பிறகும் வழக்கறிஞர் உதயகுமார் பேச முற்பட்டபோது இந்த ஆளை வெளியே அனுப்புங்க செக்யூரிட்டி இந்த ஆளை வெளியே தள்ளுங்க என தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசி இழிவுபடுத்தி வழக்கறிஞர் உடையில் அமர்ந்து கொண்டிருந்ததையும் பொறுப்பெடுத்தாமல் விவசாயிகளுக்கு முன்பாகவும் வழக்கறிஞர்களுக்கு முன்பாகவும் அதிகாரிகளுக்கு முன்பாகவும் மிகவும் இழிவான மரியாதை குறைவான முறையில் வழக்கறிஞர் உதயகுமாரை மாவட்ட ஆட்சியர் நடத்தியதாக கூறப்படுகிறது

Also Read : உதகையில் 9 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அஜித் என்பவனுக்கு 32 ஆண்டுகள் சிறை.

பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாட அனைத்து அதிகாரங்களும் வழக்கறிஞர்களுக்கு இருப்பதாகவும் ஒரு வழக்கறிஞரை வாதாடக்கூடாது ஆஜராக கூடாது என்பதற்கும் வெளியே போ என்று ஒருமையில் பேசுவதற்கும் இழிவாக நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது? என்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்களின் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பொதுமக்களிடமும் வழக்கறிஞர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார் என்றும்

Also Watch : N.Sree Radha advocate- Empowering Advocate Voice for the Well-being of Children's and Women's

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகள் ஏழைகள் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பை அளித்து  நன்மதிப்பைப் பெற்று அரசு அதிகாரியாக செயல்பட்டனர். 

ஆனால் தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரோ சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது

Also Read : கோயம்பேட்டில் டாஸ்மாக் ஊழியர் வெட்டபட்ட வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 3 ரவுடிகள் கைது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்களின் சங்கங்களும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி அந்த நகலை மாநில தலைமை நிலைய செயலாளரிடமும் உள்துறை செயலாளரிடமும் வருவாய்த்துறை செயலாளரிடமும் மாநில உயர் அதிகாரிகளிடமும் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Also Read : நிலம் வீடு வாங்குவோருக்கு சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு.. உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.

VIDEOS

RELATED NEWS

Recommended