நீர் இல்லாததால் காய்ந்து கருகும் காய்கறிகள்.

அஜித்குமார்

UPDATED: May 3, 2024, 7:25:55 AM

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். தற்போது அவர்கள் தங்களுடைய விவசாய நிலங்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டிருக்கும் மிளகாய் செடிகள், கத்திரிக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் செடிகள் தற்போது விவசாயிகளின் கைகளுக்கு மகசூலை கொடுக்க வேண்டிய இந்த வேலையில்

இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் கோடை மழை ஏமாற்றப்பட்டுள்ளதால் கோடை மழை நம்பியும் நிலத்தடி நீர் இருப்பை நம்பியும் பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் தற்போது தண்ணீர் சரிவர கிடைக்காததால் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த மிளகாய் செடிகள், தக்காளி மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட செடிகளில் காய்கள் கருகி சுருங்கி வெயிலுக்கு சுருண்டு செடிகளுக்கு அடியிலேயே விழுந்து கிடக்கும் அவல நிலையில் உள்ளதால் இதை பயிரிடப்பட்டிருக்க விவசாயிகள் மிகவும் வேதனையுடன் காணப்படுகின்றனர்.

தாங்கள் பயிரிடப்பட்ட காய்கறிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அறுவடை செய்ய தயாராக இருந்த வேளையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் அழுகியும் காய்ந்தும் வயலில் விழுந்து கிடப்பதால் அவைகளை அள்ளி வயல்வெளியில் இருந்து வெளியே வீசுவதும் கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர் விவசாயிகள்.

 

VIDEOS

Recommended