• முகப்பு
  • விவசாயம்
  • சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடைளான வேலை நிறுத்தப் போராட்டம்.

சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடைளான வேலை நிறுத்தப் போராட்டம்.

அந்தோணி ராஜ்

UPDATED: May 30, 2024, 7:56:49 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டிய புரம் மற்றும் அய்யனாபுரம் பகுதிகளில் மருத்துவ துணி எனப்படும் காஸ் பேண்டேஜ் உற்பத்தி பிரதானமாக நடைபெறுகிறது.

இத் தொழிலில் அப் பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக உள்ள 4 ஆயிரம் தறிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஜீன் மாதம் 3 ஆண்டுகளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 3ம் ஆண்டுக்கான கூலி உயர்வை இந்த மாத தொடக்கத்தில் இருந்து மருத்துவ துணைி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். 

ஆனால் இன்று வரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தால் சத்திரப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் 4 ஆயிரம் தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி வாழும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளதால், இன்று ஒரு நாள் மட்டும் தொழிலாளர்களுக்கு ரூ. 12 லட்சம் வரை கூலி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தறிகள் இயங்காததால் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் மருத்துவ துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. கூலி உயர்வு போராட்டம் குறித்து இன்று பிற்பகலில் நடைபெற உள்ள மகாசபை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப் பட்டு, அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட போராட்டத்தை தவிர்க்க ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் முன் வர வேண்டும் எனவும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேட்டி : குருசாமி - சிறு குறு விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர்.

 

VIDEOS

Recommended