டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையை முதலமைச்சர் காலத்தோடு திறந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க கோரிக்கை.
தருண் சுரேஷ்
UPDATED: Apr 28, 2024, 6:23:57 AM
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மண்டல நிர்வாக குழு தீர்மான கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாநில தலைவர் ராஜபாலன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் இந்த தீர்மானம் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்து விட்ட பின்னும் கூட தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்பட வில்லை
டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், தற்போது டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு பணப்பயிர் பருத்தி, எள்ளு, பச்சபயிர் உள்ளிட்ட கோடை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவ்வப்போது மின்சார தட்டுப்பாடு ஏற்படுகிறது கோடை சாகுபடிக்கு மின்சார தட்டுப்பாடு இல்லாமல் தடையின்றி மின்சாரம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் , தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளில் தோறும் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமபுற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
மேட்டூர் அணையை திறக்க கோரிக்கை
தமிழக அரசு பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கிட வேண்டும் அதற்கான ஒரு கண்காணிப்பு குழு கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக மேட்டூர் அணையை காலத்தோடு திறந்து தட்டுப்பாடு இல்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.