• முகப்பு
  • விவசாயம்
  • பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஆர். தீனதயாளன் 

UPDATED: Apr 25, 2024, 10:53:02 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அண்டக்குடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மும்முனை மின்சாரத்தை நம்பி சுமார் 1000-ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மும்முனை மின்சாரம் சரிவர வழங்காததால் பயிரிடப்பட்டு பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வரும் நிலையில் உள்ளது.

மேலும் மும்முனை மின்சாரம் எப்போது வழங்கப்படுகிறது என்று மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்தும் விவசாயிகள், இதுதொடர்பாக பலமுறை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு ஏக்கருக்கு 30-ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் மும்முனை மின்சாரம் வழங்கினால் மட்டுமே பயிர்களை காப்பாற்றி விவசாயிகளை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிப்பதுடன், மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended