• முகப்பு
  • விவசாயம்
  • பருத்திக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

பருத்திக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

சண்முகம்

UPDATED: Jul 11, 2024, 6:32:49 PM

வேளாண் செய்திகள்

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தியை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். 

வேலை பளு அதிகம் கொண்ட பருத்தி விவசாயத்தில் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வரும் நிலையில் கிலோ ஒன்றுக்கு அரசு கொள்முதல் நிலையங்களில் 70 ரூபாய் எனவும், தனியார் வியாபாரிகளிடம் 62 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

Tamil Nadu Farmer News

பல்வேறு சிரமங்கள் பட்டு செலவு செய்தும் பருத்திப் பயிரில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை எனவும், அதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் கிலோ 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை நிலையான விலை கிடைக்க வேண்டும் என வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர். 

இதேபோன்று கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பருத்தி அறுவடை செய்யும் போது கூலி ஆட்களை வைத்தால் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் வரை கூலி தர வேண்டும் அதனால் பலர் தங்கள் குடும்பத்தினரோடு அறுவடை செய்து வருகின்றனர்.

Agriculture News in Tamil 

ஏனெனில் விற்பனை விலை அதிகமானால் கூலி ஆட்களை வைத்து பருத்தி அறுவடை செய்வது லாபகரமாக இருக்கும் எனவும் விற்பதோ கிலோ 70 ரூபாய் எனும்போது அதில் கூலியாக 15 ரூபாய் சென்று விட்டால் பயிரிட்ட விவசாயிக்கு எதுவுமே கிடைக்காது எனவும் நஷ்டம் ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர். 

அதனால் அனைத்து பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கும் பலனளிக்கும் படியாக நிலையாக கிலோ ஒன்றுக்கு பருத்திக்கு 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் விடியா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended