மின் தடையால் விவசாயிகள் அவதி.

பரணி

UPDATED: Apr 21, 2024, 7:53:37 PM

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சுற்றியுள்ள சிறுவளையம், பெருவளையம், மேலப்புலம்புதூர், நெடும்புலி, ஜாகீர் தண்டலம், திருவென்பாக்கம், பொய்கை நல்லூர், செட்டிபாளையம், அகவளம், உள்ளிட்ட பகுதிகளில் சொர்ணவாரி பருவ நடுவப்பனைகள் மும்முறமாக நடந்து வருகிறது

இந்த நிலையில் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது ஆனால் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் வழங்குவதில் மின்துறையினர் எந்தவித கால அட்டவணையும் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர்

மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக இருமனை மின்சாரம் வழங்குவதால் விவசாயிகள் மோட்டார் பம்பு செட்டுகளை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சொர்ணவாரி பருவ நடவு பணிகள் ஈடுபட்டு வருகிறோம் நடவு செய்த பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாது நிலை உள்ளது மின்சார தடையால் பயிர்கள் கருகி வருகிறது

இதனால் உடனடியாக மின்சார துறையினர் சீரான மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

 

VIDEOS

Recommended