இனி விவசாயம் செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு தான கடன் தள்ளுபடி கிடைக்கும் - விவசாயிகள் வேதனை
JK
UPDATED: May 9, 2024, 6:04:18 AM
Trichy District News Today
திருச்சி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வாழை பயிர்கள் அறுவடை சமயத்தில் தண்ணீரின்றி முற்றிலுமாக காய்ந்து, வாடிவதங்கி மண்ணில் சாய்ந்துள்ளது விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
கந்துவட்டி, வங்கிகள் மற்றும் கூட்டுறவுசங்கங்களில் கடன்பெற்று வாழை சாகுபடி செய்து ஏக்கருக்கு 2லட்சம் வரை செலவிட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றையதினம் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Online Trichy News & Updates In Tamil
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரைச் சந்தித்து இழப்பீடு வழங்ககோரி தங்களது மனுவை அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகி அயிலைசிவசூரியன்
தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்யும், கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திருச்சி மாவட்ட செய்திகள்
அதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,000 ஏக்கர் வாழை சாகுபடி செய்யப்பட்டது. மழை பெய்யவில்லை, கர்நாடகா அரசும் தண்ணீர் தரவில்லை, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை, நிலத்தடி நீரும் சுமார் 100 அடிக்கு கீழ சென்று விட்டது.
வெயிலும் கடந்த ஆண்டு போல அல்ல அதிக அளவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே இருந்து வருகிறது. எனவே வாழைகளை காப்பாற்ற முடியவில்லை அனைத்தும் கருகிவிட்டது. ஏக்கருக்கு விவசாயிகள் ரூபாய் 2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.
இன்றைய திருச்சி மாவட்ட செய்திகள்
இந்த பணம் வங்கிகளில் கடன் வாங்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத்தின தீட்சதர் பாலசுப்ரமணியன் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு பிரச்சனைகளால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். சுமார் 30,000 ஏக்கர் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 20,000 ஏக்கர் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிலத்தடி நீரும் கீழே சென்று கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட நேரத்தில் விவசாயம் எப்படி இருக்கும் எனக் கேட்டால் இனி சிறு, குறு விவசாயிகள் என சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இன்னும் 5வருடத்தில் இருக்க மாட்டார்கள் என்பது எங்களது கணக்கு ஏனென்றால், தனியாருடைய பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கிறது.
எனவே வருங்காலத்தில் தமிழகத்தில் கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் விவசாயம் செய்வார்கள். கம்பெனிகள் ஆரம்பித்து வங்கிகள் அவர்களுக்கு உதவி செய்யும். இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மிகப்பெரிய தொகையை அரசு தள்ளுபடி செய்யும்.
எனவே தமிழகத்தில் விவசாயகள் இருக்க மாட்டார்கள். கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விவசாயம் செய்யும் என்ற துர்நிலை உருவாகும் என தெரிவித்தார்.