தேங்காய் விவசாயம் வளர்ச்சி பெருமா ?பழையபடி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமா ? வாழ்வாதாரம் பெருகுமா?
ராஜா
UPDATED: Apr 27, 2024, 10:37:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோம்பை கிராமத்தில் வசிக்கும் கணேசன் என்பவர் சுமார் 28 ஆண்டுகளாக தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த கால கட்டத்திலேயே மாஸ்டர் டிகிரி வரை படித்துவிட்டு கல்வித் தகுதி மூலம் அரசு வேலைக்கு சென்று இருக்கலாம் ஆனால் அதில் ஈடுபாடு இல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய தொழிலான விவசாய தொழிலையே செய்வோம் என தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் மூலம் பல உச்சங்களையும் தொட்டுள்ளார்.
தற்போது கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தேங்காய் வியாபாரம் மட்டுமல்லாது எந்தத் தொழில்களுமே ஒரு நலிவடைந்த நிலையில் தான் காணப்படுகிறது.
மேலும் தேங்காய் தொழிலானது தமிழகத்தில் 8 கோடி மக்களில் 25 லட்சம் பேர் தேங்காய் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதாக கூறுகிறார்
மேலும் ஜிஎஸ்டி போன்ற சரியான திட்டங்கள் வரிவிதிப்பு வந்து அமையாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
மேலும் இந்த ஐந்து மாநில விவசாயிகளின் கோரிக்கை போராட்டமானது நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கூறினார்.
மேலும் தேங்காய் வியாபாரம் ஆனது தென்னை மரத்திலிருந்து தேங்காயை பருவ காலத்தை பார்த்து வளர்ச்சி அடைந்த பின்னர் வெட்டி எடுத்து ஆட்களை வைத்து வாகனங்களில் தொழில் செய்யக்கூடிய இடங்களுக்கு அழைத்து வந்து பின்பு அந்த தேங்காய் களின் உரித்து முறையாக வெளி மாநிலங்களுக்கும் அல்லது மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ALSO READ | நடிகை மேகா ஆகாஷ் சமீபத்திய படங்கள்.
தேங்காய் மட்டைகளில் மூலம் டஸ்ட் மற்றும் மட்டை மூலம் பிரித்தெடுக்கப்படும் நாடுகளை வைத்து மெத்தைகள் மற்றும் டஸ்டு மூலம் அமைக்கப்படும் செங்கல் கட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது இவ்வாறு தேங்காய் மூலம் பல்வேறு தொடர்பான தொடர் தொழில்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு போதிய நடைமுறை இருந்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் ஏற்றுமதி செய்வதன் மூலம் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் வருவாய் ஈட்ட ஒரு வழிவகை செய்யப்படும் என அரசுக்கு நல்ல ஒரு ஆலோசனை வழங்குகிறார்.
மேலும் அண்டை நாடுகளான இலங்கை பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் நல்ல நட்புறவில் இருக்குமேயானால் இந்தியாவின் தேங்காய் வியாபாரம் கொடி கட்டி பறக்கும் என ஒரு விவரத்தை பதிவு செய்கிறார்.
பாகிஸ்தானில் கடந்த காலங்களில் 20 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது அது இல்லாமல் இருப்பது பெரிதும் கவலை அளிப்பதாக கூறுகிறார் இதனால் தேங்காய் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் சாதாரண சித்தாள் வேலை செய்யக்கூடிய தொழிலாளர் வரை பயனடைவர் என்ற ஒரு விவரத்தை பதிவு செய்கிறார்.
தேங்காய் விலை மட்டுமல்லாது நமது தமிழகத்திலும் இந்திய அளவிலும் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை எளிய முறையில் வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நடைமுறை என்பதை எளிதாக அரசு செயல்படுத்துமேயானால் விவசாயிகளும் விவசாய பெருங்குடி மக்களும் சாலையில் இறங்கி போராட வேண்டிய தேவை வராது கடந்தாண்டிலிருந்து தற்போது வரை ஐந்து மாநிலங்களுக்கு மேல் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களும் அவர்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகளையும் அரசு முறையாக அளிக்குமேயானால் விவசாய பெருங்குடி மக்களும் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள் மேலும் அரசின் வருவாயையும் அதிகப்படுத்த முடியும் என கோவையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி கணேசன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி: கோம்பை விவசாயி & வியாபாரி கணேசன்.