• முகப்பு
  • விவசாயம்
  • வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டாவது மறைமுக ஏலத்தில் பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 6799க்கு ஏலம்.

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டாவது மறைமுக ஏலத்தில் பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 6799க்கு ஏலம்.

தருண்சுரேஷ்

UPDATED: Jun 23, 2024, 6:25:06 PM

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்குப் பின்னர் கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பரிசு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14,000 எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்றது.

இந்நிலையில் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இருப்பினும் நடப்பு பருவத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் நடப்பு பருவத்திற்கான இரண்டாவது பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ)உத்தரவின் பேரில் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர்.

ஆறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 6, 799 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 4,889 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 5,971 க்கும் ஏலம் போனது.

பருத்தி மறைமுக ஏலத்தில் 355 குவிண்டால் பருத்தி 21 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன் பெற ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

VIDEOS

Recommended