அய்யாக்கண்ணுவை மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
JK
UPDATED: Jul 29, 2024, 1:16:17 PM
திருச்சி மாவட்டம்
விவசாய விளைப் பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா அரசு மாதந்தோறும் தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அய்யாக்கண்ணு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.
Agriculture News in Tamil
அவர்கள் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது எனக் கூறி 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பேங்க் ஆப் பரத் மாவட்டம் நர்மதாபுரம் ரயில் நிலையத்தில் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்
மேலும் இது ஒன்றிய அரசின் உத்தரவு என்று கூறி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மட்டர் தூரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை தற்போது அடைத்து வைத்துள்ளனர்.
விவசாயிகள் நியூஸ் அப்டேட்ஸ்
இந்த கைதை கண்டித்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.