தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி.

ராஜா

UPDATED: May 12, 2024, 3:12:26 PM

தேனி மாவட்டம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராம தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் கம்பம் வட்டார பகுதியில் களப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது

அதனை தொடர்ந்து இன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தை அவன் பட்டியில் விவசாயிகளுக்கான வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

இந்த வேளாண் கண்காட்சியில் மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையில் நவீன ப்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள் மற்றும் சத்துள்ள பொருட்கள் விளைவிப்பது குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் சோலார் ஒலி மூலம் மின்சாரம் தயாரிப்பது உழவன் செயலியை கையாளும் முறை குறித்தும் சூரிய சக்தி நீர்ப்பாசன அமைப்பின் நன்மைகள் குறித்தும் தேனி வளர்ப்பு குறித்த சாதனங்கள் கையாளுவது குறித்தும்

உயிர் வாழ்வு உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும் செங்குத்து விவசாயம் தென்னையில் முக்கோண விவசாயம் பட்டுப்புழு வளர்ப்பு திருந்திய நெல் சாகுபடி செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து மாணவிகளால் படைப்புகள் செய்யப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

மேலும் இந்த கண்காட்சியில் நாராயண தேவன் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு மாணவிகள் நவீன மேலாண்மை முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

VIDEOS

Recommended