கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

JK

UPDATED: Jun 10, 2024, 9:53:33 AM

கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகளில் திறப்பு - மாணவ - மாணவிகளுக்கு முதல் நாளே புத்தகம் வழங்கப்பட்டது.

வருடம் தோறும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பள்ளி வகுப்பறைகள் மைதானங்கள் ஆகியவை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

இன்று கோடை விடுமுறை முடிந்து 45நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்பதற்காக 8மணிக்கு ஆர்வமுடன் பள்ளியில் ஆசிரியர்கள் காத்திருந்தனர்.  

இன்று 10மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100க்கு 100மதிப்பெண் எடுத்த மாணவ -மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து துவக்கபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கப்படும் இலவச புத்தகம் நோட்டு இன்றைய தினமே மாணவ மாணவி வழங்கப்பட்டது.

மணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் உற்சாகத்துடன் வந்து தங்களது நண்பர்களை பார்த்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended