• முகப்பு
  • கல்வி
  • புத்தள மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கு 

புத்தள மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கு 

ரஸீன் ரஸ்மின் , அரபாத் பஹர்தீன்

UPDATED: Jun 1, 2024, 3:47:33 PM

புத்தள மாவட்டத்தின் மௌலவி ஆசிரியர்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கொன்று எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

 

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி சபை மேற்படி கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

புத்தளம் மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான மேற்படிக் கருத்தரங்கில் அரபு மொழி மற்றும் அரபு இலக்கிய தகமைகளை மேம்படுத்தும் நோக்கில் இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இக் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை புத்தளம் சாஹிராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதான கல்வியமைச்சு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர், புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்கு கல்வி அமைச்சின்


மேலதிக செயலாளர் பீ.ஆர்.காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

VIDEOS

Recommended