• முகப்பு
  • கல்வி
  • பிரபல பி எம் எஸ் பள்ளியில் உள்ள கழிவறைகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் அசுத்தமாக துர்நாற்றம் வீசுகிறது - மாணவிகள் குற்றச்சாட்டு.

பிரபல பி எம் எஸ் பள்ளியில் உள்ள கழிவறைகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் அசுத்தமாக துர்நாற்றம் வீசுகிறது - மாணவிகள் குற்றச்சாட்டு.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 10, 2024, 6:53:51 PM

கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரசு பொது தேர்வுகளுக்கு பிறகு 45 நாட்கள் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் இன்று காலை தமிழக முழுவதும் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை கோடை விடுமுறைக்கு பின் அனைத்து துவக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாளத் தெருவில், பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் இல்லம் அருகே பிரபல பி எம் எஸ் பள்ளி செயல்பட்டு வருகின்றது . இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள்.

இன்று காலை இறை வணக்கத்துடன்  பள்ளி துவங்கியது . இன்டர்வல் இடைவெளி நேரத்தில் கழிவறைக்கு சென்ற மாணவிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் பூட்டப்பட்டு உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஏற்கனவே இருந்த மொபைல் டாய்லெட்டில் தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசி இருக்கும் அவல நிலை கண்டு சிறுநீர் கழிக்க வழி இல்லாமலேயே வகுப்புகளுக்கு திரும்பினார்.  

துணிச்சலாக ஒரு சில மாணவிகள் , அலங்கோலமாக உள்ள கழிவறைகளையும் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகியோர் வருகைக்காக காத்துக் கொண்டுள்ள"பூட்டப்பட்டுள்ள" கழிவறைகளையும் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர்.  

மாணவிகள் எடுத்த அந்த வீடியோ தற்போது whatsapp வலைத்தளத்தில் பல பள்ளி மாணவ மாணவிகளிடையே மிகவும் வைரலாக பரவுகிறது.

 

  • 1

VIDEOS

Recommended