• முகப்பு
  • கல்வி
  • ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.

வேல் முருகன்

UPDATED: May 28, 2024, 10:46:27 AM

Undergraduate Admissions 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30-05-2024 வியாழக்கிழமை அன்று முதல் நடைபெற உள்ளது.

30-05-2024 அன்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர;களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர;கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கும், முதல்கட்ட முதல் சுற்று பொதுக்கலந்தாய்வு 10-06-2024 அன்று முதல் 15-06-2024 வரை நடைபெறும்.

மாணவ, மாணவியர் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் வருகை தரவேண்டும்.

கலந்தாய்விற்கு வரும் போது 10, +1, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / மாற்றுச் சான்றிதழ் (TC) / சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ் / ஆதார் அட்டை அசல் (Original) மற்றும் நகல்கள் -2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் – 2, ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வரவேண்டும்.

சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்த கொள்ள அதற்கான சான்றிதழை கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வரவேணடும்.

கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும் என கல்லூரி கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்தவர்களின் சேர்க்கை காண தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான www.gascjayankondam.ac.in என்ற இணையதளத்தில் 28-05-2024 முதல் காணலாம்.

முதல்கட்ட இரண்டாம் சுற்று பொதுக்கலந்தாய்வு 24-06-2024 முதல் 29-06-2024 வரை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் 03-07-2024 அன்று தொடங்கும்.

தரவரிசைப்பட்டியின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும் அல்லது குறுஞ்செய்தி/வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்ற தகவலை கல்லூரி முதல்வர், முனைவர்; க.இமேஷ் தெரிவித்துள்ளார். 

 

VIDEOS

Recommended