எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் மத்திய மாகா வித்தியாலயத்திலும் 4 வகுப்பறைகளைக் கொண்ட முதலாது மாடி திறந்து வைப்பு
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Jun 11, 2024, 9:15:12 AM
அநுராதபுரம் , எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் குவைத் அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் அல் ஹிமா இஸ்லாமிய சேவிஸ் திட்டத்தின் கீழ் பௌதீக வளம் குறைந்த பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடிங்களை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் மத்திய மாகா வித்தியாலயத்திலும் 4 வகுப்பறைகளைக் கொண்ட முதலாது மாடி வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் இசாக் ஏ ரஹ்மான் , மற்றும் குவைத் துாதுவரின் பிரநிதியாக இலங்கையின் குவைத் துாதுவர் அலுவலக அதிகாரி அஷ்ஷேக் எம் .பிர்தௌஸ் நளிமி , அல் ஹிமா இஸ்லாமிய சேவிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம். ஏ நுாறுல்லாஹ் நளிமி, உப தலைவர் ஏ.ஆர்.எம். அமினுடீன், கல்லுாரி அதிபர் ஏ.சி.அமீன“ மற்றும் உதவிப் கல்விப் பணிப்பாளர் எம்.நவாஸ் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெருமளவிம் கலந்து சிற்பித்தனர்.
குவைத் அரசாங்கம் இலங்கையின் பின்தங்கிய பிரதேசத்தில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இவ்வாறாக வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்து வருகின்றது. அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கையில் உள்ள மாணவர்கள் கல்வியில் முன்னேறி வாழ்வதற்காக கடந்த பத்து வருடங்களாக இலங்கைக்கு உதவி வருவதாகவும் இத் திட்டத்தினை அநுராதபுற மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளுக்கு பெற்றுத் தருமாறும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பணர் இசாக் ஏ ரஹ்மான் குவைத் துாதுவரிடம் கோரிக்கை விடுத்தாகவும் பணிப்பாளர் நுாறுள்ளாஹ் மொளலவி தெரிவித்தார்.
இப் பாடசாலையின் ஏனைய குறைபாடுகளை பாராளுமன்ற உறுப்பிணர் உடன் நிறைவேற்றி வருவதாகவும் உறுதியளித்தார். இப்பாடசாலையில் கல்வி கற்ற உயர் தர 3 மாணவர்கள் 3 ஏ தரம் சித்தியெத்தியை இட்டும் அதிதிகள் பாராட்டினார்கள்.