அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேல்முருகன்
UPDATED: May 16, 2024, 7:53:28 PM
அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது, விண்ணப்பக் கட்டணம் ரூ.50/ - Debit card/ Credit card/ Net banking வாயிலாக செலுத்த வேண்டும்.
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்களிலும் தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
ALSO READ | கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி.
மேலும் விபரங்களுக்கு 1. அரசு தொழிற்பயற்சி நிலையம், அரியலூர் 9499055877, 04329-228408. 2. அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டிமடம் 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.