- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வக்பு வாரிய இடத்தில் இந்துக்களின் கோயில் இருப்பதை பெருமையாக கருதுகிறோம் ; வக்பு வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான்.
வக்பு வாரிய இடத்தில் இந்துக்களின் கோயில் இருப்பதை பெருமையாக கருதுகிறோம் ; வக்பு வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான்.
செ.சீனிவாசன்
UPDATED: Aug 11, 2024, 3:49:10 PM
Latest Nagai District News
நாகையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வக்பு வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான் கலந்துகொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில் ; பள்ளிவாசல், தர்கா ஆகியவைகளுக்கு செல்வந்தர்கள் தாமாக முன்வந்து ஏராளமான சொத்துக்களை கொடுத்துள்ளனர்.
இதை பராமரித்து முறைப்படுத்தவே வாக்புவாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாக்பு வாரியம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
வக்பு வாரியம்
வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இந்துக்களின் வணக்கஸ்தலம் இருப்பதை ஒரு போதும் வக்புவாரியம் எதிர்க்கவில்லை. இதை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர்.
வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இந்துக்களின் வழிபாட்டு ஸ்தலம் இருப்பதை பெருமையாக தான் கருதுகிறோம்.
News
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து சொத்துக்களை மீட்கவே வாக்பு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வைத்து இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ஒரு போதும் நாங்கள்
நினைக்கவில்லை. வாக்பு வாரிய சொத்துக்களை கையாடல் செய்யும் முத்தவல்லிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயக்கம் காட்டப்படமாட்டாது என்று கூறினார்.