- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சேத்தியாத்தோப்பு அருகே கிராம நிர்வாக உதவியாளர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு.
சேத்தியாத்தோப்பு அருகே கிராம நிர்வாக உதவியாளர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு.
சண்முகம்
UPDATED: Jun 18, 2024, 8:12:57 AM
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியின் பூதங்குடி பகுதியில் வெள்ளியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வரும் மோகன் (49) என்பவர் ஏரியில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் இறந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மோகன் அருகில் உள்ள பொன்னங்கோவில், பரதூர் சாவடி, பரதூர் ஆகிய கிராமங்களின் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரி பகுதிக்கு இயற்கை உபாதைக்காக வந்தவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது. இது குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு