சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்.

அஜித் குமார்

UPDATED: Jun 27, 2024, 5:18:40 AM

கலசபாக்கம் அடுத்த கொண்டம் சொரக்குளத்தூர் கூட்டு சாலையில் இருசக்கர மோட்டார் வாகனம் மீது மினி வேன் மோதியதில் மோட்டார் வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த இருசக்கர வாகன விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தனது அலைபேசியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து பல்வேறு உதவிகளை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

செய்து மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கொண்டம் சொரக்குளத்தூர் கூட்டு சாலையில் நேற்று இருசக்கர மோட்டார் வாகனத்தை ஆனந்தன் மகன் பவுன்குமார் இவர் செங்கம் அடுத்த பெரிய கல்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் திருவண்ணாமலையிலிருந்து போளூர் செல்வதற்காக கொண்டம்

சொரக்குளத்தூர் கூட்டு சாலையில் சென்றிருந்தபோது அதே வழியில் போளூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த மினி வேன் வாகனம் எதிரே வந்த இருசக்கர மோட்டார் வாகனத்தில் மோதியதால் பவுன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வெம்பாக்கம் அலுவலகத்தில் நடைபெற தாலுக்கா உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து சென்று கொண்டிருந்த பொழுது விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனத்தை விட்டு கீழே இறங்கி உடனடியாக தனது அலைபேசியில் இருந்தே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல்  கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியோடு விபத்தில் பலத்த காயமடைந்த பவன் குமாரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விபத்தில் காயம் அடைந்த இளைஞர் தலைக்கவசம் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

உடனே என்னுடைய பைலட் வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தேன். ஆனால் இளைஞருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை இருந்ததால் அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டார்,

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து தங்களது உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு பணிகளுக்கு இடையே விபத்தை கண்டதும் சென்று விடாமல் இறங்கி ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து மனித உயிரைக் காக்கும் வகையில் ஆம்புலன்ஸ் புறப்பட்டு செல்லும் வரை காத்திருந்து  ஆட்சியருக்கு அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended