• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள் நாகை ஆட்சியர் அறிவுரை

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள் நாகை ஆட்சியர் அறிவுரை

செ.சீனிவாசன்

UPDATED: Jun 10, 2024, 9:43:57 AM

தமிழகம் முழுவதும் பள்ளிதிறப்பையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 701 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற 88453 மாணவர்களுக்கு புத்தகம், 3 லட்சத்து 13 ஆயிரத்து 430 நோட்டுகள் வழங்கப்பட்டது.

நாகை நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாணவர்களுக்கு புத்தக நோட்டுகளை வழங்கி, 26113 மாணவ மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை தொடங்கி வைத்தார்.

அதோடு மாணவர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளியிலேயே அஞ்சலக கணக்கு தொடங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கூறுகையில் ;

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள் என்று கூறினார்.

மேலும், இன்றைய துவக்க நாளில் இருந்து எதாவது இலக்கை முன்வைத்து மாணவர்கள் பயணிக்க ஆசிரியர்கள் திறம்பட செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 

VIDEOS

Recommended