விபத்தில் சிக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல்.

கார்மேகம்

UPDATED: Jun 6, 2024, 4:57:50 AM

விவசாயிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிவரும் கால்நடைகள் விபத்தில் பாதிக்கப்படும் போது அவற்றை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கால்நடைத்துறைக்கு அரசால் இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது

அதற்கு 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் உடனடியாக ஆம்புலன்சு அனுப்பி வைக்கப்படும்

இந்த வாகனத்தில் அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் கருவிகள் உபகரணங்கள் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஒரு கால்நடை டாக்டர் உதவியாளர் ஓட்டுனர் ஆகியோர் இருப்பர் நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ஹைட்ராலிக் லிப்ட் இன்வெர்ட்டர் ஜெனரேட்டர் ஆகிய வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது

இந்த ஆம்புலன்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகள் பாதிக்கப்படும்போது ஆம்புலன்சு சேவை கிடைக்காத நிலையே உள்ளது சாலையில் திரியும் கால்நடைகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாலோ உடல்நிலை பாதிக்கப் பட்டாலோ அதனை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு சிலர் 1962 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கின்றனர் ஆனால் ஆம்புலன்சு வருவதற்கு பல மணி நேரம் ஆகிறது பல நேரங்களில் ஆம்புலன்சு வருவதே இல்லை அவ்வாறு வந்தாலும் பாதிக்கப்பட்ட கால்நடைகளை யாராவது உரிமை கொண்டாடினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று  மருத்துவ உதவி செய்ய மறுக்கின்றனர் 

இவ்வாறு மாவட்டத்தில் 1962 ஆம்புலன்சு சேவையினர் கால்நடைகளை மீட்க வருவதில்லை என்ற தொடர் புகார் எழுந்துள்ளது ராமநாதபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் வாகனம் மோதி காலில் அடிபட்டு கிடந்த மாடு ஒன்றை‌ மீட்டு சிகிச்சை அளிக்க ஆம்புலன்சு சேவையை அழைத்தும் வரவில்லை என அப்குதியினர் தெரிவிக்கின்றனர்

உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் 5 மணி நேரத்திற்கு பின்னர் பழுதடைந்த வாகனம் ஒன்றை கொண்டுவந்தனர் பல மணி நேரம் மாடு உயிருக்கு போராடியது பொதுமக்களை மிகுந்த வேதணை அடையச் செய்தது எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும்

1962 ஆம்புலன்சு சேவை கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்க வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். 

 

VIDEOS

Recommended