- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கீழ்வேளூர் அருகே நீலப்பாடி இராதாநல்லூர் பகுதி சாலையின் நடுவே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு.
கீழ்வேளூர் அருகே நீலப்பாடி இராதாநல்லூர் பகுதி சாலையின் நடுவே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு.
செ.சீனிவாசன்
UPDATED: Apr 24, 2024, 8:53:58 PM
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா அத்திப்புலியூர் ஊராட்சி நீலப்பாடி இராதாநல்லூர் பகுதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடை சரி செய்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அந்தப் பகுதிக்கு மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இராதாநல்லூர் காளியம்மன் கோயில் பின்புறம் உள்ள தெருவின் சாலையின் நடுவே மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து வழங்கியதாக கூறப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட இடமானது தெருவில் வசித்து வரும் பெரியார்செல்வம் மற்றும் ராஜாங்கம் இவர்களின் வீட்டு வாசல் பகுதியிலும் அதேபோல் அப்துல் அஜீஸ் என்பவருக்கு சொந்தமான பட்டா பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து சாலையில் நடுவே மேல்நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு 10 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தோண்டப்பட்ட பள்ளத்தால் இரு வீட்டாரும் உள்ளே செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டபோது அவரது கணவர் சாலையின் நடுவில் தான் குடிநீர் தேக்க தொட்டி வரும் எனவும் நீங்கள் வேண்டுமானால் தொட்டி கட்டியதும் அதன் உள்ளே புகுந்து செல்லுங்கள் என அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்தப் பணியானது சாலையின் நடுவிலும் அப்துல் அஜீஸ் என்பவரின் பட்டா இடத்திலும் தொட்டி கட்டுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது
இது குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையின் நடுவே இரு வீட்டிற்கு வாசல் செல்வதற்கு வழி விட்டும் அதே பகுதியில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் தேக்க தொட்டியை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.