• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மதுபான பாட்டிலில் கிடந்த எட்டுக்கால் பூச்சியால் குடிமகன்கள் அதிர்ச்சி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மதுபான பாட்டிலில் கிடந்த எட்டுக்கால் பூச்சியால் குடிமகன்கள் அதிர்ச்சி.

அச்சுதன்

UPDATED: May 16, 2024, 10:53:23 AM

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கரும்பாலம் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான லோகநாதன் என்பவர் ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கியுள்ளார்.

அதன் பிறகு பழத்தோட்டம் பகுதிக்கு சென்ற லோகநாதன் மது அருந்த பாட்டிலை எடுத்த பொழுது பாட்டிலின் உள்பகுதியில் ஏதோ மிதப்பதைக் கண்ட லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார் அதில் கிடந்தது எட்டு கால் பூச்சி மற்றும் எறும்புகள் கிடப்பதைக் கண்ட லோகநாதன் மது பாட்டிலுடன் கரும்பாலம் டாஸ்மாக் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

அப்பொழுது கடையில் பணியில் இருந்த ஊழியர்கள் அந்த மது பாட்டிலை திரும்ப தருமாறு வேறு பாட்டில் தருவதாகவும் மேலும் இது எங்களுடைய குற்றமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் குற்றமென்றும் தயாரிப்பு நிறுவனமான எஸ்என்ஜே நிறுவனத்திடம் புகார் அளிப்பதாகவும் கூறினார்

அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது இதனைக் கண்ட மற்ற மது பிரியர்கள் தாங்கள் வாங்கும் பாட்டிலை உற்று உற்றுப் பார்த்து வாங்கி சென்றனர் சமீபகாலமாக தமிழகத்தில் பல இடங்களில் மது பாட்டிலில் பூச்சிகள் கிடப்பது வாடிக்கையாகிவிட்டது.

 

VIDEOS

Recommended