• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் ஆவின் ஒப்பந்த வேன் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் - காலை பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டது.

திருச்சியில் ஆவின் ஒப்பந்த வேன் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் - காலை பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டது.

JK

UPDATED: May 29, 2024, 1:36:11 PM

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள கொட்டப்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் பெரம்பலூர், அரியலூர், கரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட பால் முகவர்களுக்கு 1.20 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

முகவர்களுக்கான பால்பாக்கெட்டுகளை திருச்சி ஆவின் நிறுவனத்தில் இருந்து 42வாகனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டாக ஆவின் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் வேன்களுக்கு வருடம் ஒரு முறை வாடகை தொகை வழங்கப்படும் அப்படி வழங்கப்பட்ட வந்த தொகையை தற்போது 4மாத வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளாதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேன் ஓட்டுனர்களின் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் வாடகை நிலுவையில் உள்ளதால் ஒப்பந்த வேன் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக முகவர்களுக்கு பால் கொண்டு செல்லும் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

திருச்சியில் உள்ள பால் முகவர்கள் தங்கள் பகுதிக்கு பால் பாக்கெட்கள் வரவில்லை என்பதால் பால் முகவர்கள் தங்களை சொந்த வாகனத்தை கொண்டு வந்து பால்பாக்கெட்டுகளை தங்கள் பகுதிகளை கொண்டு சென்றனர்.

தொடர்ந்து வேன் ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனை தொடர்ந்து காலை முகவர்களுக்கு பால் பாக்கெட் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டதுடன் மாலையில் பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது. 

இந்த திடீர் வேன் ஓட்டுநர்கள் போராட்டத்தால் திருச்சி மற்றும் கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பால் முகவர்களுக்கு பால் பாக்கெட் அனுப்பப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

 

  • 1

VIDEOS

Recommended