- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டுவிழா.
கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டுவிழா.
ராஜா
UPDATED: Jun 8, 2024, 7:24:49 PM
கடந்த வாரம் கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற 11 மாணவ ,மாணவிகளுக்கு கிராம மக்கள் மலர்மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் பயிற்சியாளர் ஆனந்த வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்து பாராட்டுக்களை தெரிவித்தனர்
இதுகுறித்து துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, உலக சிலம்பம் போட்டி கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் இந்தியா, மலேசியா இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் எங்களிடம் பயிற்சி பெற்ற ஆண்டிபட்டியை சேர்ந்த மாணவர்கள் 11பேர் கலந்துகொண்டுஒற்றைச்சிலம்பம் , இரட்டை சிலம்பம் , சுருள்வாள் போட்டிகளில் 4 பேர்கள் தங்கப்பதக்கம் ,10 பேர்கள் வெள்ளி பதக்கமும், 6 பேர்கள் வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.
அவர்களை பாராட்டுவதில் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் அசோசியேசன் பெருமை கொள்கிறது என்று கூறினார்.
விழாவில் மாணவ மாணவிகள் மொத்தமாக குழுசிலம்பம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.