காஞ்சிபுரம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த பலருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 14, 2024, 12:42:34 PM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் வையாவூர் ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வையாவூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும், அதே போன்று அங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலும் உடல் உபாதைகள் ஏற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தற்போது இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சங்கர மருத்துவமனை, ஐயம்பேட்டையிலுள்ள மருத்துவமனை, சவிதா அதே போன்று மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவற்றில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஸ்வினி என்கிற 60வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாந்தி மற்றும் வயிற்று போக்கின் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் கடந்த புதன்கிழமை மாலை உயிரிழந்திருக்கிறார்.

அதே போல் அதே கிராம் அதே தெருவை சேர்ந்த சரோஜா என்கிற மூதாட்டிக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்ததாகவும் ஆனால் எவ்வித சிகிச்சையும் பெற்றாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் வியாழக்கிழமையான நேற்று மாலை உயிரிழந்தாகவும் சொல்லப்படுகிறது.

இந்த உயிரிழந்த சடங்கு வீட்டிற்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சென்றிருந்த நிலையில் பலருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதும் ,

இதனால் தான் இவர்கள் உயிரிழந்தார் என எண்ணி அவ்வூரில் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு உள்ளவர்கள் மேலும் கலக்கத்தில் இருந்து வருவதோடு பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

அப்பிரச்சனைக்கான காரணம் குடிநீரா எனும் சந்தேகம் எழுவதாக கூறும் அப்பகுதி மக்கள் உடனடியாக அக்குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சுகாதாரத்துறையினர் தங்களது பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென கோரிக்கையை‌ விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended