- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் 44 மில்லியன் கன அடி நீர் உயர்வு
ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் 44 மில்லியன் கன அடி நீர் உயர்வு
S.முருகன்
UPDATED: Jun 18, 2024, 6:53:16 PM
நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து பூஜ்ஜியத்தில் இருந்து 645 கன அடியாக உயர்ந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 15.72 அடி, மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடி, நீர்வரத்து 645 கன அடி, நீர் வெளியேற்றம் 136 கன அடியாக உள்ளது.
நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக ஒரே நாள் இரவில் 44 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது.
அது மட்டுமின்றி ஏரிக்கு பூஜ்ஜியத்தில் இருந்த நீர் வரத்தானது 645 கன அடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு