• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களை அனுமதிக்காததை கண்டித்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார்.

காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களை அனுமதிக்காததை கண்டித்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 21, 2024, 9:55:19 AM

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் முரசு கட்சி சார்பில் ஆவடி மற்றும் தாம்பரம் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை என்ற செய்தி எனக்கு கிடைத்தது

அதைத் தொடர்ந்து நானும் வழக்கறிஞர் என்ற முறை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றேன் அனுமதிக்கப்படவில்லை என அவர் கூறினார் .

சாதாரண ஏழை மக்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களுடன் வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும் என்று விதி உள்ளபோது அதை ஜனநாயக ரீதியாக நிலை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புகார் மனுவினை அழைத்துள்ளேன்.

பொருளாதாரம் குற்றம் தொடர்பாக எந்த ஒரு வழக்கினையும் வழக்கறிஞர்கள் சென்றால் தானே உண்மை நிலையை கண்டறிய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

ஏப்ரல் 21 ஆம் தேதி நிலம் பிரச்சனை தொடர்பாக ஒரு வழக்கில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை இதே சூழ்நிலை தான் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திலும் நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended