• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன் உயிர் நீத்த 9 காவலர்களுக்கு அஞ்சலி.

ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன் உயிர் நீத்த 9 காவலர்களுக்கு அஞ்சலி.

லட்சுமி காந்த்

UPDATED: May 22, 2024, 4:43:51 AM

District News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்த கோர தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

33rd death anniversary of India's former PM Rajiv Gandhi

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில் கோர தாக்குதல் நடைபெற்று, 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூண் அருகே உயிர் நீத்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் அனைத்துக் காவல்நிலைய காவலர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பல்வேறு தாக்குதலில் காயமடைந்து காவலர்களின் அடையாளமாக திகழ்ந்த முன்னாள் டிஜிபி தேவாரம் கலந்து கொண்டு உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

VIDEOS

Recommended