- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ளச்சாராயப் படுகொலைக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டி தமிழ் தேசிய பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயப் படுகொலைக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டி தமிழ் தேசிய பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ரமேஷ்
UPDATED: Jun 29, 2024, 12:22:06 PM
கும்பகோணத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய படுகொலைக்கு நிர்வாக பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி இருவரும் பதவி விலக வேண்டும்
மேலும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கையாக டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காந்தி பூங்கா முன்பு தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் மாநகர செயலாளர் செழியன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு விடுதலைச்சுடர், கிளை செயலாளர் தீந்தமிழன், தூயவன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.