• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணகுமார் மனைவிக்கு இழப்பீடு வேண்டி 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்.

மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணகுமார் மனைவிக்கு இழப்பீடு வேண்டி 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்.

ராஜா

UPDATED: May 17, 2024, 7:01:58 PM

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தக்களம் அருகில் தென்னந் தோப்பிற்கு தோட்ட வேலைக்கு சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார், 27 வயது நிரம்பிய இளைஞர் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அதே மின்சார வேலியில் சிக்கி அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு ஒன்றும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த கிருஷ்ணகுமாருக்கு திருமணம் முடிந்து கைகுழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கினாலும் தனியார் தென்னந்தோப்பு உரிமையாளரின் அஜாக்கிரதையாளும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் கூடலூர் காவல் ஆய்வாளர் வனிதா மணி தலைமையிலான போலீசார் உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடலை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிருஷ்ண குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தபோது இறந்த கிருஷ்ணகுமார் 27 வயது இளைஞர் ஆவார் இவரது மனைவி கைக்குழந்தையுடன் என்ன செய்வார் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்

அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேட்டி: அருந்தமிழரசு.

 

VIDEOS

Recommended